பச்சைப்பயிறு கொத்துக்கறி செய்வது எப்படி?

 
பச்சைப்பயிறு - 200 கிராம்
தேங்காய் - 1
காய்ந்த மிளகாய் - 10
மல்லி - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டிசீரகம் - 1 தேக்கரண்டி
முந்திரி - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 3
மஞ்சள்தூள் - சிறிதளவு
பட்டை, கிராம்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பச்சைப் பயிறை ஊறவைத்து அவித்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். துருவிய தேங்காயோடு மல்லி, சீரகம், மிளகு, சோம்பு, காய்ந்த மிளகாய், முந்திரியை வறுத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும், அரைத்த கலவையைக் கொட்டி, உப்பு சேர்த்து, அவித்த பச்சைப் பயிறைக் கொட்டி, மஞ்சள் தூள் போட்டு கிளறி மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிட்டு இறக்கி விடுங்கள். கொத்துக்கறி ரெடி.

உதடுகளை பராமரிக்க சில குறிப்புகள்

கார்லிக் க்ரேவி

அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசிய கிச்சன் டிப்ஸ் 

 

அறுசுவை சமையல் உலகம்