மூலிகை ஜூஸ்


அருகம்புல் ஜூஸ்

தேவை :
அருகம்புல்-1 கட்டு
தேன் - 2 டேஸ்பூன்
ஏலக்காய் - 1 சிட்டிகை

செய்முறை :
அருகம்புல்லை சுத்தம் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் தேன், ஏலக்காய்ப் பொடி சேர்த்து பருகவும்.
அருகம்புல் அடிக்கடி சேர்ப்பது இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். உடல் உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்ய உதவும்.

அத்திப் பழ ஜூஸ்
தேவை
உலர்ந்த அத்திப்பழம்-4
எலுமிச்சம் பழம் - 1
புதினா இலை - 4

மிளகு பொடி - 2 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
அத்திப்பழங்களை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஜூ்ஸ் எடுக்கவும். அத்திப்பழ ஜூஸூடன் எலுமிச்சம் சாறு, உப்பு, தேவையான அளவு தண்ணீர், மிளகு பொடி சேர்த்துக் கலந்து புதினா இலை தூவி பருகவும். அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகையை போக்கும் தன்ைமயுடையாது. மலச்சிக்கலையும் போக்கிறது.

கொய்யா இலை ஜூஸ்
தேவை :
கொய்யா இலை - 1/2 கப்
பால் - 1 கப்
தேன் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை :
கொய்யா இலைகளை காம்பு எடுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பருகவும்.
பார்லி ஜூஸ்
தேவை :
பார்லி - 3 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் - 4 டீஸ்பூன்
சீனி  - 4 டீஸ்பூன்
தேன்  - 2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
புதினா இலை - 4
செய்முறை
பார்லியை இரண்டு டம்பளர் தண்ணீர் விட்டு வேக விட்டு வடிகட்டிக் கொள்ளவும். அந்த நீர் ஆறியதும் எலுமிச்சம் ஜூஸ், சீனி, தேன், உப்பு, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி இலை தூவி, வட்டமாக நறுக்கிய எலுமிச்சவில்லையை டம்ளரில் சொருகி பருகக் கொடுக்கவும். பார்லியை அடிககடி உணவில் சேர்ப்பதால் சிறுநீர் தொல்லைகள் தீரும்.

சுக்கு தனியா ஜூஸ்
தேவை :
சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்
தனியா - 3 டீஸ்பூன்
எலுமிச்சம்பழம் - 1
தேன் - தேவையான அளவு
செய்முறை
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். தனியாவை மிக்ஸியில் ஒரு அடி அடித்துக் கொள்ளவும். சுக்குப் பொடியையும் தனியா பொடியையும் 2 கப் நீரில் போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து வடிகட்டி எலுமிச்சம் ஜூஸ், தேன் கலந்து சூடாகவோ அல்லது ஐஸ் கட்டிகளை சேர்த்து குளிர்ச்சியாகவோ பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிப்பதால் பித்தத்தினால் ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி,  அஜீரணம் நீங்கும், நன்கு பசி எடுக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடிக்கலாம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை குடிக்கலாம்.

அறுசுவை சமையல் உலகம்