உடல் சூட்டைத் தணிக்கும் மாதுளை

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பு, புளிப்பும் கலந்த மாதுளைன்னு மொத்தம் மூன்று வகையான மாதுளை இருக்குது. குடல் அழற்சியைப் போக்கிற சக்தி புளிப்பு மாதுளைக்கு உண்டு.


இது, உணவு செரிக்கிறதையும் துரிதப்படுத்தும். மேலும், குடல்ல ஏற்படுற இயல்பான மாற்றங்களையும் சரி செய்யும் ஆற்றல் அதுக்கு உண்டு.


இனிப்பு மாதுளை, உடல் சூட்டைத் தணித்து, ரத்த விருத்தியைப் பெருக்கும். அதுமட்டுமல்லாம, உடல் பலவீனத்தைப் போக்கி, தெம்பு கொடுக்கும்.
மாதுளையோட பூ, பழம், விதை, பட்டைன்னு எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுது. வைட்டமின் சி மற்றும் பி இதுல அதிகமா இருக்குது. மேலும், இதயநோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் வேதிப்பொருட்களும் நிறைய இருக்குது. ஜூரத்தோட சேர்ந்து வர்ற வாந்தி, மயக்கம், நாக்குல நீர் சுரக்குறது போன்ற பிரச்சினைகளுக்கு மாதுளை ஜூஸ் சிறந்து மருந்து. ஆனால், எப்போதும் போல இதை ஜூஸ் போடக்கூடாது. மாதுளை முத்துக்களை ஒரு மெலிசான துணியில போட்டுப் பிசையனும். பிறகு துணியைப் பிழிந்சா, சாறு வரும். அதுல கற்கண்டைப் பொடி செய்து போட்டு கலக்கி குடிச்சா, வாந்தியும் நிற்கும் நாக்குல நீர் சுரக்குற தொந்தரவும்  இருக்காது.

அறுசுவை சமையல் உலகம்