Select Your Language & Read this Site

ஈரல் முந்திரிப் பருப்பு வறுவல்


தேவையான பொருட்கள்
ஈரல் - 1/2 கிலோ
முந்திரிப் பருப்பு - 10
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகுத்தூள் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
செய்முறை ;
ஈரலை சுத்தம் செய்து கியூப்களாக நறுக்கி கொள்ளவும்.
அகலமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
முந்தரி பருப்பையும் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி வேகவைக்கவும்.
ஈரல் நன்கு வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி விடவும்.

அறுசுவை சமையல் உலகம்