அயிரை மீன் குழம்பு

தேவையான பொருட்கள்
அயிரை மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
புளி - எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
மீனைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
புளியைக் கரைத்து வடிகட்டி, அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி இவை சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து தட்டிய பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்போது கரைத்த புளிக்கரைசல், மசாலா இவை சேர்த்து ஊற்றி கொதிக்கவிடவும்.
மசாலா கலவை கொதித்ததும், மீனைப்போட்டு குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்த இறக்கவும்
சுவையான அயிரை மீன் குழம்பு மணக்க மணக்க தயார்.

அறுசுவை சமையல் உலகம்