சிக்கன் மொகலாய்

தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராமம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பிரஷ் கிரீம் - 4 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
தேங்காய் - 1/4 மூடி
முந்தரி பருப்பு - 10
கசகசா - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை லவங்கம் - தலா 2
செய்முறை ;
தேங்காய், கசகசா, முந்தரி போன்றவற்றை அரைத்துக் கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது, கீறிய மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
தனியாத்தூள், தயிர் போதுமான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி சிக்கனை வேக வைக்க சேர்க்கவும்.
சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
உப்பை சரி பார்த்து பிரஷ் கிரீம் சேர்த்து கிளறி இறக்கவும்.

அறுசுவை சமையல் உலகம்