பேரீச்சம் பழம் அல்வா

பேரீச்சம் பழம் அல்வா
இது சத்துள்ள அல்வா. ரசித்து ருசித்த சாப்பிடும் அளவுக்கு சுவையானது.
தேவையான பொருட்கள் :
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 1/4 கிலோ
சர்க்கைர (தூளாக்கியது) - 1/2 கப்
உருக்கிய நெய் - 1/4 கப்
திராட்சை, முந்தரி - தேவையான அளவு
காய்ச்சிய பால் - 4 கப்
செய்முறை :
முதலில் பேரீச்சம்பழத்தை நீரில் ஊறவைத்துப் பிறகு மிக்ஸியில் மைபோல அரைத்துக் கொள்ளுங்கள்.
கனமாக பாத்திரத்தில் பால், சர்க்கரை, அரைத்து வைத்த பேரீச்சம்பழ விழுது ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து, நன்றாக கிளறி விடுங்கள்.
அடுப்பை நிதானமாக எரிய விடவும்.
ஒரளவு கெட்டியானதும், நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றிக் கிளறி விடுங்கள்.
கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதத்திற்கு வரும்போது, நெய்யில் வறுத்த முந்தரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கிவிடுங்கள்.
நெய் தடவிய தட்டில் அல்வாயைக் கொட்டி, துண்டுகளாக வெட்டி பரிமாறுங்கள்.

அறுசுவை சமையல் உலகம்