மைதா கார ரோல்ஸ்

தேவையானவை : மைதா மாவு - 1 கப், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை : மைதா மாவு, உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு உருண்டையில்லாமல் நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு, மாவு மிருதுவாகும் வரை பிசையவும். அதனை அரை மணி நேரம் ஊற விடவும். அரிசி மாவில் நெய்யை ஊற்றி க்ரீம் போல் வரும்வரை கையால் பிசையவும். பிறகு, மைதா மாவு கலவையிலிருந்து சிறிய அளவிலான மாவு உருண்டையை எடுத்து, சப்பாத்தி போல தேய்க்கவும். குழைத்த அரிசி மாவு கலவையை, அதன் மீது சமமாகத் தடவி, சீராகக் சுருட்டிய ரோலை நீளவாக்கில் குழவியால் தேய்த்து, கத்தியால் சாய்வாக வெட்டவும். இதனைச் சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதேபோல மொத்த மாவையும் செய்து முடிக்கவும்.

அறுசுவை சமையல் உலகம்