கேழ்வரகு சப்பாத்தி

என்னென்ன தேவை ?
கேழ்வரகு மாவு - 100 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், வெல்லம் - 100 கிராம், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய், 50 மி.லி.
எப்படிச் செய்வது?
வெல்லத்தைப் பாகாக் காய்ச்சி வடிக்கட்டிக் கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை நெய்யில் வறுத்து, அத்துடன் கேழ்வரகு மாவு, வெல்லப்பாகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒரு மணி நேரம் நன்றாக ஊற வி்டவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி, சற்று கனமான சப்பாத்தியகளாகத் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, ஓரத்தில் சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு, நன்றாக வேகவிட்டு எடுக்கவும். தக்காளிச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட, இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன் அருமையாக இருக்கும்.
என்ன சிறப்பு ?
கால்சியம், இரும்புச் சத்தும் நிறைந்த முழுமையான உணவு.
குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
- பா.கவிதா, சேலம்-8.

அறுசுவை சமையல் உலகம்