கதம்பக் குழம்பு


தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் -3, வெண்டாக்காய் - 8, முருங்கைக்காய் - 2, உருளைக்கிழங்கு -2, மலபார் சேனை - சிறிது, சேப்பங்கிழங்கு -10, சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1 அல்லது 2, பச்சைப் பட்டாணி - சிறிது, மஞ்சள் பூசணி - 1 துண்டு, வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப், சாம்பர் பவுடர் - இரண்டரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, வெல்லம் -சிறிதளவு, புளி , எலும்பிச்சை அளவு, பச்சை மிளகாய் (நீளவாக்கில் வெட்டியது) -3, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது.
தாளிக்க...
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது
கிழங்கு வகைகளை பிரஷர் குக்கரில் வேக வைத்து, உரித்து பெரிய துண்டுகளாக வெட்டவும். மற்ற காய் கறிகள் அனைத்தையும் 2 அங்குல நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கத்தரிக்காய், வெண்டைக்காயை வதக்கவும். வதக்கிய காய்களோடு, மற்ற காய்கறிகளும் சேர்த்து நீர்த்த புளிக்கரைசலில்  வேக வைக்கவும். உப்பு, வெல்லம், கீறிய பச்சை மிளகாய், சாம்பார் பவுடர், வேக வைத்து மசி்த்த துவரும் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து, குழும்பு கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.சிறிது எண்ணெயை சூடாக்கி, தாளிதப் பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, குழம்பில் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கடைசியில் சேர்க்கவும்.

அறுசுவை சமையல் உலகம்