காளான் இட்லி


தேவையான பொருள்கள் :

காளான் - 500 கிராம்
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
இஞ்சி -1/2 அங்குலம்
பூண்டு - 5 பல்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 6
புதினா - 1 சிறு கட்டு
கொத்தமல்லித் தழை - விருப்பப்படி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் - 1/2 மூடி
உப்பு - தேவைக்கு ஏற்ப
-->
செய்முறை :

முன்தினம் இட்லிக்கு மாவு அரைத்துக்கொள்ளவும். காளானைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து அதில் இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். வதக்கியபின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் காளானை நன்றாக வேகவிடவும். வெந்தவுடன் இறக்கிக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித் தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நறுக்கியவற்றைப் போட்டு வதக்கவும். இத்துடன் வேக வைத்த காளானையும் சேர்க்கவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்றாகக் கிளறவும். பின்னர் கரம் மசாலாவைப் போட்டு இறக்கிக்கொள்ளவும்.

அரை மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். இட்லி வேக வைக்கும் தட்டுகளில் இட்லி மாவைக் கொஞ்சம் ஊற்றி இதன் மீது காளான் கலவையை வைத்து மறுமடியும் இதன்மீது மாவை ஊற்றி இட்லிகளை வேக வைக்கவும். வெந்தபின் இறக்கிவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைப் போட்டு வதக்கி இறக்கவும். வேக வைத்த இட்லிகள் மீது தாளித்த கலவையைத் தூவிப் பரிமாறவும்.
-->

அறுசுவை சமையல் உலகம்