ஸ்டஃப்டு கம்பு இட்லி

என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு...
கம்பு-1 கப், இட்லி புழுங்கலரசி - 2  கப், துவரம் பருப்பு - முக்கால் கப், உளுந்து - கால் கப், ருசிக்கேற்ப.
ஸ்டஃபி்ங் செய்ய...
துருவிய கேரட் - அரை கப், துருவிய பனீர் - கால் கப், வேகவைத்த மக்காளச்சோள மணிகள் (ஒன்றும் பாதியுமாக) - அரை கப், சாட் மசாலா தூள் - அரை டீஸ்பூன்.
தவிர...
பிரெட் ஸ்லைஸ் - தேவைக்கேற்ப, உப்பு - ருசிக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கம்பு, இட்லி அரிசியைக் கழுவி, ஒன்றாக ஊற வைக்கவும். துவரம் பருப்பையும், உளுந்தையும் ஒன்றாக ஊற வைக்கவும். இரண்டையும் தனித்தனியே அரைத்து ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து மறுநாள் வரை புளிக்க வைக்கவும். பிரெட்டை இட்லித்தட்டின் உள் அளவுக்குத் தகுந்த வட்டங்களாக வெட்டி வைக்கவும்.ஸ்டஃப் செய்யக் குறிப்பிட்ட பொருள்களை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். எண்ணெய் தடவிய இட்லித்தட்டின் மேல் பிரெட் லைஸ்ஸை வைத்து. அதன் மீது சிறிது ஸ்டஃப்பிங் வைக்கவும். இட்லி மாவை ஊற்றவும். இதே போல எல்லா இட்லியையும் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். சட்னி,சாம்பருடன் பரிமாறவும்.

அறுசுவை சமையல் உலகம்