ஸ்டஃப்டு குடமிளகாய்


என்னென்ன தேவை?


குடமிளகாய்-3, பிரெட்-1 ஸ்லைஸ், நறுக்கிய வெங்காயம்-கால் கப், கேரட் - கால் கப், பட்டாணி - கால் கப், உரித்த மக்காளச் சோளம் - கால் கப், காலிஃபிளவர் - கால் கப், நறுக்கிய முளைக்கீரை -அரை கப், இஞ்சி - மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், உப்பு -ருசிக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், எலுமிச்சம் பழம் -1, மஞ்சள் தூ்ள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிது.


எப்படிச் செய்வது?
குடமிளகாயை மத்தியில் இரண்டாக கப் போல  நறுக்கவும். விதைகளை நீக்கி, சூடான  தண்ணீரில் ஒரு நிமிடம் போட்டு எடுக்கவும். கேரட், பட்டாணி, சோளம் வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், காலிஃபிளவர், இஞ்சியின்  காய் விழுது சேர்த்து வதக்கவும். அத்துடன் கீரை, வேக வைத்து காய்கறி, காளான், உப்பு, மஞ்சள் தூள்  சேர்த்து வதக்கவும். கடைசியில் கொத்தமல்லி, எலுமிச்சம் பழ ஜூஸ் கலந்து இறக்கவும். பிரெட்டை மிக்சியில் தூளாக்கவும். குடமிளகாயினுள் மசாலாவை நிரப்பி, மேலே பிரெட் தூள் தூவி, ஒரு நான்-ஸ்டிக் கடாயில் குறைந்த தணலில் சிறிது எண்ணெய் விட்டு, மூடியால் முடி, 5 நிமி்டங்கள் வைத்து எடுத்துப் பரிமாறவும்.


எல்லா காய்கறிகளும் சேர்ந்து இருப்பதோடு, எலுமிச்சைச்சாறும் சேர்ந்திருப்பதால் பலவித வைட்டமின்களும், தாதுக்களும் கிடைத்து, நோய் எதிர்ப்பபுத் திறன் அதிகாரிக்கும்.

அறுசுவை சமையல் உலகம்